Community

விடையில்லா கேள்வியுடன்‌

வீதியில் தெரியும்
பெண்களை
விளையாட்டாக பார்த்து
ரசித்து திரிந்தவன்‌ நான்
விதியின் வலியால்
என் விழியின்‌ பிழையால்
விழுந்தேன்
அவள் காதல் வலையில்… விருப்பங்களுக்கேற்பவே
ஆரம்பத்தில் நகர்ந்த காதல்
பின்னர் பல
விதிமுறைகளுடன்‌ நகர்ந்தது.
காதல்விதிமுறைகள்‌ ஒன்றும்‌ அடக்குமுறைகளல்ல.
அவை அதீத அன்பின் வெளிப்பாட்டுமுறைகள்
என‌அறிந்தவன்‌ நான்…
புரிதலில் வலுப்பெற்றது காதல்.
இருபத்துநான்குமணிநேரம்
போதாது
என்றிருந்த
அலைபேசிஅரட்டை
இரு…பத்து நிமிடம்
கழித்து வருகிறேன்
என்னுமளவிற்கு தொய்வானது… ஏதேதோ காரணங்கள்
எதற்கெதற்கோ முளைத்தன.
காதலின் போது அறியாத
பெற்றோர் பாசம்
அவள் கல்யாணத்திற்கு
தெரிந்தது
தேவையும்பட்டது போல…
தூரத்தை இணைத்த தொலைபேசி இன்று இன்னும் தொலை தூரமாக்கியது.
சோகம் சொந்தமாகவும்
கவலை கடன்காரனாகவும்
சேர்ந்து
வரமுறையில்லா
அவள் நினைவுகளால்
வன்முறை செய்து கொண்டிருக்கின்றது…
விடையே கிடைக்காது
என தெரிந்திருந்தும்
கேள்வியுடன் நான்.

By
காலம் முழுதும்
காதலுக்காக கவிபாடும்
கவிதைக்காதலன்
ROBINMANI.K
9787978593