Community

சாவுக்குள் தெளிவுபடு

கீழ்சாதிக்காரனின் இரத்தமும்
சிவப்பு தான்
மேல்சாதிக்காரனின் நிழலும் கருப்புதான்…
நூறடி நிலம் வைத்திருந்தாலும் இறுதியில் செல்லப்போவது
ஆறடி தான்…
தாழ்ந்தவன் எவனும் மண்ணுக்கடியில் பிறக்கவில்லை
உயர்ந்தவன் ஒருவனும்
வானிலிருந்து விழவில்லை…
பிறக்கும் போது நீயும் நிர்வாணம் தான் இறக்கும் போது நானும் சடலம் தான்… விலங்குகளுக்கும் கீழாய் எங்களை விலக்கி வைக்கிறாயே விதி வந்தால் நீயும் மண்ணுக்கு கீழ் தான்…
வீட்டிற்குள் நுழைந்தால் தீட்டு என்கிறாயே…
என்
போன்றவன் பலரின் வியர்வையில் தான் உன் வீடே உருவாக்கப்பட்டது…
சாதிகளால் எனை இழிவுபடுத்தும் நீ…
உன் சாவுக்குள் ஒருநாள் தெளிவுபடுவாய்…
அன்று நீயும் இந்த தீண்டாமை அகல வழிவிடுவாய்…
சாதி மதம் பாராமல் சமத்துவத்தை நிலைநாட்டுவோம்…
எந்த தலைவர்களும் சாதி பார்க்க சொல்லவில்லை
அப்படி சொன்னவர்கள்
தலைவர்களே இல்லை…
.by
கவிதைக்காதலன்
கா.ராபின்மணி
9787978593