Community

தொட்டுக்க நீ

காலைல சமையலறைக்கும் ஹாலுக்கும் ஒடிக்கொண்டிருந்தா லட்சுமி இந்த பரபரப்புல்லாம் ஒன்னும் புதுசு இல்ல சதா எல்லா திங்கட்கிழமையும் வீட்டில இப்படி தான் நடக்கும் லஞ்ச் பாக்ஸ் கட்டி அந்த வேன்ல 8 மணிக்கெல்லாம் ஏத்துறதுக்குள்ள வீடே ஒருவழி ஆகிடும்
இது எதுவுமே நடக்காத மாறி அமைதியா
தூங்கிட்டு இருப்பார் சாரதி ஏன்னா அவருக்கு ஆபிஸ் 10:30 மணிக்கு தான் 9.30 மணிக்கு எழுந்து பல் விளக்கி குளியல போட்டு 10 மணிக்கு சாப்பிட உட்காருவார். அன்னைக்கு அப்படி சாப்பிட உட்காரும் போது ஏதோ ஒரு மாற்றம் அவர் செயலில் எப்போதும் என்ன சாப்பிட இருக்குனு லாம் கேட்க மாட்டார் அன்னைக்கு கேட்டார் " என்ன இது?"
“இன்னைக்கு லேட் ஆகிடுச்சு அதான் உப்புமா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்க னு” சொல்லி சமாளிக்கும் போது குறுக்கிட்டு
" தொட்டுக்க ஒன்னும் இல்லையா?" னு குரல்ல ஒரு சலிப்போட கேட்டார் . லட்சுமிக்கு ஒரு நிமிடம் முகம் சோகமா போறத பார்த்த சாரதி "அதான் நீ இருக்கியே தொட்டுக்க " னு தன் இடது கையால அவள் கைய பிடிக்க வெட்கத்த மறச்சிகிட்டு “சாப்பிடுங்க நேரமாகிட போது னு கைய விலக்கி விட்டு சமையலறைக்கு போய் வெட்கத்தில் கைய வைத்து முகம் மூடினாள்.அலாரம் அடித்தது மணி 7 என்ன இது 6 மணிக்கு வச்சா 7 மணிக்கு அடிக்குது னு பிள்ளையிடம் கேட்க " அம்மா நீ தான் ஆப் பண்ணாம 1 மணிநேரத்திற்கு தூங்கிருக்க” னு சொல்வதைக் கேட்டு கனவு தான் என அலுத்துக் கொண்டு. "இன்னைக்கு உப்புமா தான்‌டா ஒழுங்கா சாப்பிட்டு போ " னு தலைமுடிய கொண்ட போட்டு சமையலறை நோக்கி வேகமாக நடந்தாள் லட்சுமி