Community

அவளின் அடையாளம் அவளின் தந்தை

அழகான மழைக்காலத்தில் இவ்வழகிய உலகில் மழை துளி போல் பூமிக்கு வந்தாள். என்ன ஒரு ஆனந்தம். அனைவரின் மகிழ்ச்சிக்கும் அர்த்தமாக ஒரு அர்த்தமுள்ள செயல்களை செய்ய பிறந்த பெண்ணே! என் கண்ணே! என்று அவளின் தந்தையின் மனதில் நினைத்தபடி அவளை அணைத்து ஆனந்த கண்ணீரில் திளைத்தார் .
காலங்கள் அழகாக நகர்ந்தன. அவளின் தந்தை வார்த்தைகளை கடவுள் வார்த்தைகளாக நினைத்து மகிழ்ந்து வந்தாள். குழந்தை பருவங்கள் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகின. அவளின் ஒவ்வொரு வெற்றி படிகளுக்கு பின்னால் அதன் தந்தை இருந்தார்.
இதுவும் கடந்து போகும் என்ற வரிகளுக்கு ஏற்ப அவளின் வாழ்க்கையில் சில சூழ்நிலைகள் அவளை திருப்பி போட்டது. அவளைப் போற்றிய உறவுகள் அவளை தூற்ற ஆரம்பித்தனர் . என் மகள் என்று கூறியவாறு மனதில் வலிகளுடன் முகத்தில் புன்னகையுடன் மாறிய மகளின் வாழ்க்கையை சரி செய்ய உதவினார். எந்நிலையிலும் உன்னுடன் நான் இருப்பேன் என்று வார்த்தைகளால் சொல்லாவிட்டாலும் தனது அன்பாலும் அரவணைப்பாலும் காட்டினார்.
அவளுக்கு ஏன் எப்பொழுதும் துணை நிற்கிறீர்? அவளை அடித்துத் திருத்தலாம் ஆனால் அவளை அரவணைத்துக் கொள்கிறீர்? உங்கள் செல்லம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் . பெண் பிள்ளையை அடக்கி வளர்க்க வேண்டும். “பெண் பிள்ளை என்றாலும் என் பிள்ளை அல்லவா ! அவள். எனக்கு மட்டும் என்ன ஆசையா அவள் இப்படியே இருக்க வேண்டும் என்று. அவளை மாற்றத்தான் நானும் பாடு படுகின்றேன். எல்லாரும் அவளை அடித்து திட்டும் போது நமக்கு தெரியும் அவள் நன்மைக்குதான் செய்கிறோம் என்று. ஆனால் அதை அவள் தவறாக புரிந்து கொண்டால் என் செய்வது. அனைவரும் நம்மை பொருத்துகின்றனர் என்று அவளுக்குள் எண்ணம் ஏற்பட்டு விட்டால் அனைத்தும் வீணாகி விடும் அல்லவா. அவள் என் மகள் அவள் சீக்கிரம் தன் நிலைமையையும் நம் நிலைமையை புரிந்து கொள்வாள்” என்று தந்தை கூறினார்.
எல்லாம் நல்லதுக்கே என்று நினைத்து மனதில் உறுதியுடன் வாழ்க்கையைத் தொடங்கினாள். இப்பொழுது முன்னைவிட மனதில் வலிமையும் செயலில் வேகத்துடன் பொறுமையும் பெற்று செயலினை செய்யத் தொடங்கினாள். உலகில் வாழ வேண்டும் என்றால் சில தடைகளும், எதிரிகளும் வேண்டுமல்லவா! அப்பொழுதுதானே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் ,வெற்றி பெற வேண்டும் என்று தோன்றும். சில வழிகளும் வேண்டுமல்லவா இன்பம் கொள்ள.
காலங்கள் கடந்தன அவளின் வாழ்க்கை சிறப்பாக மாறியது. பல வலிகளை தாண்டி இன்று ஒரு சாதனைப் பெண்ணாக இருக்கிறாள். அவளின் தந்தையின் நம்பிக்கையும் வார்த்தைகளுமே அவளை என்பது ஒரு ஆளாக்கியது. எல்லாம் நன்மைக்கே!