Community

சமூகத்தின் மாற்றம்

ஒரு அழகான வயல்வெளி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. …அந்த வயல்வெளி மேல் நீதிமன்றத்தில் புகார் இருப்பதால் அதை யாருமே உபயோகிக்காமல் இருந்தனர்…

அதனால் அந்த ஊரில் இருக்கும் சில சின்ன பசங்கள் அந்த வயல்வெளியை சுத்தம் செய்து ... பள்ளி விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடி வந்தார்கள்..... அதே மைதானத்தில் சில பெரிய பசங்க  சீட்டு,கோலி விளையாட்டு விளையாடிட்டு மது அருந்திக்கொண்டு இருப்பார்கள்...

இந்த கதை கிரிக்கெட் விளையாடும் பசங்களுக்கும் … மது அருந்திவிட்டு அலப்பறை செய்யும் பெரிய பசங்களுக்கும் இடையே நடக்கும் காட்சி தான் இந்த கதை…

அந்த மைதானம் எப்போவுமே ஆட்கள் நிறைது காணப்படும்…

அன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் அந்த ஊரிள் இருக்கும் சின்ன பசங்க எல்லாம் கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தாங்க…

அந்த ஊரில் இருக்கும் பெரிய பசங்க எல்லாம் லாரி ஓட்டுனர்கள் என்பதால் … அப்பப்போ எல்லோரும் மது அருந்துவதற்க்கு அந்த மைதானத்திற்க்கு தான் வருவார்கள்… அப்படி ஒரு நாள் ஒரு 5 பெரிய பசங்க … நிறைய பணம் சம்பாதித்து விட்டு வந்திருக்கிறார்கள்…
வழக்கம் போல அந்த 5 பேரும் மது வாங்கிக்கிட்டு வந்து அந்த மைதானத்தின் மறைவான பகுதியில் அமர்கிறார்கள்…

அந்த 5 பேரில் ஒருவன் மச்சான் மதுபாட்டில் வாங்கியாச்சு ஆனால் "சைடிஸ் " வாங்காம வந்துட்டன் டா என்று சொல்கிறான்… அதற்க்கு மற்றோருவன் என்னடா இப்படி பண்ணிட்ட என்று சொல்லி … அந்த மைதானத்தை பார்க்கிறான். அப்பொழுது அங்கு சின்ன பசங்க எல்லாம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்…

அந்த பெரிய பசங்களில் ஒருவன் அந்த மைதானத்தில் விளையாடும் சின்ன பசஙக்ளை நோக்கி "டேய் தம்பி இங்க வாட "என்று கூப்பிடுகிறான்…

உடனே அந்த சின்ன பசங்க எல்லாம் சேர்ந்து "டேய் அங்க எல்லாம் நாம போகக்கூடாது டா "அம்மா திட்டும் என்று சொல்லி … திரும்பவும் அவர்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்கள்…

அப்பொழுது அங்கு இருந்த பெரிய பசங்களில் ஒருவன் திரும்பவும் டேய் இங்க வாடா என்று கூப்பிடுகிறான். ஆனால் யாருமே வரவில்லை …

உடனே அவன் மைதானத்தை  நோக்கி நடந்து அவர்கள் விளையாடும் இடத்தில் போய் நின்றுக்கொண்டு டேய் .. பால் போடாத டா என்று சொல்கிறான் .. அந்த சின்ன பசங்க எல்லாம் அண்ணா நகரு நா நாங்க விளையாடனும் என்று சொல்கிறான்...

அதற்க்கு அந்த பெரிய பையன் டேய் கடைக்கு போயிட்டு வந்தா விளையாட விடுவன் இல்லனா பேட் எல்லாத்தையும் உடைச்சி போட்ருவன் என்று சொல்லி மிரட்டுகிறான்…

உடனே அதில் இருந்த ஒரு 8 வகுப்பு படிக்கும் பையன் அண்ணா நா கடைக்கு போறன் எனக்கு 10 ரூபாய் குடுக்குறியா என்று கேட்க … வாடா தரன் என்று சொல்லி அந்த சின்ன பையனை பெரிய பையன் கையப்பிடிச்சி இழுத்துட்டுபோகிறான்…

அந்த சின்ன பையன் போனதும் அங்க இருந்த சின்ன பசங்க எல்லாம் டேய் பேசாம நம்ம போயிருந்த கூட ஆயிருக்கும் … இப்ப அவனுக்கு மட்டும் அந்த அண்ணன் 10ரூபாய் குடுக்கும் என்று சொல்லி புழம்புகிறான்… இங்கு விளையாடும் சின்ன பசங்க எல்லாம் ஒரு வேலை சாப்பாட்டிற்கே ஏங்கி தவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவங்க… அவங்களுக்கு அந்த 10 ரூபாய் பெரிய பணமா தெரிந்தது …

கடைக்கு போன சின்ன பையன் … அவங்க கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்துவிட்டு 10 ரூபாய் வாங்கிட்டு வந்து ‘பிஸ்கேட் வாங்கிட்டு வந்து சாப்பிட்டுட்டு அவங்க நண்பர்களுக்கும் கொஞ்சம் கொடுத்துட்டு சாப்பிட்டு இருக்காங்க’… அந்த நாள் நன்றாக சாப்பிட்டு வீட்டுக்கு போயிட்டாங்க…

ஒரு வாரம் முடிந்தது வழக்கம் போல அந்த பெரிய பசங்க மைதானத்திற்க்கு வறாங்க … அவங்கள பார்த்து சின்ன பசங்க எல்லாம் டேய் வாங்கடா அந்த அண்ணாவுங்க வந்துட்டாங்க … அவங்ககிட்ட போனா காசு தருவாங்க வாங்கடா என்று 4 சின்ன பசங்களும் போறாங்க … வழக்கம் போல அந்த பெரிய பசங்க அந்த சின்ன பையன பார்த்து டேய் என்னடா இன்னைக்கு கூப்டாமலே வந்து இருக்கீங்க என்று கேட்கிறான்…

இல்லனா சும்மா தான் சரி நேற்று என்னென்ன சைடிஸ் வாங்கிட்டு வந்தன்னு தெரியும் தானே … ம் தெரியும் நா என்று சின்ன பையன் சொல்ல … பணத்தை வாங்கிட்டு அந்த நான்கு சின்ன பசங்களும் கடைக்கு பேய்" வாட்டர் பாட்டில் ,மிச்சர் ,டம்ளர்" எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு அண்ணா இன்னைக்கு நான்க்கு பேர் இருக்கங்க … கொஞ்சம் பணம் அதிகமா கொடுங்கள் அண்ணா என்று கேட்க அவன் 20 ரூபாய் கொடுத்து ஆளுக்கு 5ரூபாய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல … அந்த சின்ன பசங்க நான்கு பேரும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு போனார்கள்…

 பண்த்தை வாங்குன சின்ன பசங்கள்ள ஒருவன் டேய் இரு நம்ம அந்த அண்ணாவுங்க என்ன பண்றாங்கன்னு பார்க்களாம் என்று சொல்லி  மறைந்திருந்து பார்க்கிறார்கள்.. அப்பொழுது அந்த பெரிய பசங்க புள்ளா மது அருந்தி மதுவின் உச்சத்தில் அவர்கள் இருந்தார்கள்.. அதை பார்த்த சின்ன பசங்க டேய் என்னடா இவுங்க இப்படி பண்றாங்க என்று சொல்லி அங்கு இருந்து கிளம்பிவிட்டார்கள்....

இதைப்போலவே வாரம் வாரம் நடந்து கொண்டிருந்தது..  ஒரு நாள் அந்த சின்ன பசங்களுக்கே ஒரு ஆசை வந்திடுச்சி நாம்பளும் ஒரு நாள் இப்படி மது அருந்தனும் என்று சொல்ல ....  டேய் பணம் எப்படி டா ரெடி பண்றது என்று யோசிக்கிறார்கள்.. உடனே அந்த சின்ன பையன் ல ஒருவன் இப்போ பள்ளியில் ஆண்டுவிழா வரப்போகுது அதனால வீட்ல நா போட்டிகள்ல கலந்து இருக்கன் என்று சொல்லி ஆளுக்கு 50 ரூபாய் வாங்கிட்டு வாங்கடா என்று சொல்லிட்டு அவங்கவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க..

நீண்ட நாட்கள் கழிந்தன பள்ளி ஆண்டுவிழா வந்தது எல்லோரும் சொன்னதைப்போல் ஆளுக்கு 50ரூபாய் தயார் செய்து எடுத்துட்டு வந்தாங்க… வீட்டில் அனைவரும் அம்மா பள்ளியில இன்னைக்கு ஆண்டுவிழா இரவு நாங்க வரமாட்டோம் என்று சொல்லிட்டு வந்துவிட்டார்கள்… மாலை 4 மணி ஆனது சின்ன பசங்க எல்லாம் மைதானத்திற்க்கு வந்துட்டாங்க. அவங்கள்ள ஒருத்தன் மதுக்கடைக்கு சென்று மது வாங்க சென்றான் ஆனால் கடைக்காரர் நீ சின்ன பையன் உனக்கு எல்லாம் மது பாட்டில் கொடுக்க முடியாது என்று சொல்கிறார் .அதற்க்கு அந்த சின்ன பையன் அண்ணா எங்க அப்பா வண்டில இருக்காங்க குடு நா என்று கேட்க … கடைக்காரரும் பணத்தை வாங்கிக்கொண்டு மதுபாட்டிலை கொடுத்துவிட்டார்…

அவன் அந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு வேகமாக மைதானத்தை நோக்கி ஓடுகிறான்…
4சின்ன பசங்களும் குடிக்க ஆரம்பித்து விட்டு மது தலைக்கேறி அங்கேயே படுத்துவிட்டார்கள்… அந்த சமயம் பார்த்து அந்த பெரிய பசங்க மது அருந்த மைதானத்திற்க்கு வருகிறார்கள்…
மைதானத்திற்க்கு வந்த பெரிய பசங்கள் கடைக்கு போக சொல்வதற்க்காக சின்ன பசங்களை தேடுகிறார்கள் … ஆனால் யாரும் கிடைக்கவில்லை…

தூரத்தில் ஒரு முனங்கள் சத்தம் கேட்கிறது … அந்த சத்தத்தைக் கேட்டு அந்த பெரிய பசங்க அங்க போய் பார்க்கிறார்கள் … அங்கு 4 சின்ன பசங்க நல்லா குடிச்சிட்டு படுத்து இருக்காங்க …

அந்த பெரிய பையன் ல ஒருவன் யாறாக இருக்கும் என்று அவன் முகத்தை திருப்பி பார்க்கிறான்… அப்பொழுது தான் தெரிம வருகிறது … அவர்கள் கடைக்கு அனுப்புன 4 சின்ன பசங்க தான் இவர்கள் என்று …

உடனே மனதுஉடைந்த பெரிய பசங்கள் நம்மலொலத்தான் இந்த சின்ன பசங்க இப்படி ஆயிட்டாங்கள் என்று வேதனையுடன் திரும்பிச் செல்கிறார்கள்...

இந்த கதையின் மூலம் நான் சொல்லும் கருத்து என்னவென்றால்… கிராமங்களில் இருக்கும் வயதானவர்கள் புகலயிலையை வாங்கி வர அவர்களது பேரன்கள் இல்லை அங்கு இருக்கும் சின்ன பசங்களை தான் அனுப்புவார்கள் … அதனால் தான் அந்த சின்ன பசங்க அவர்களையே அறியாமல் இந்த மாதிரி போதை பழக்கத்திற்க்கு ஆளாகின்றனர்… தயவு செய்து இந்த மாதிரி செயல்களை தவிற்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்…

அவர் அவர் வயதிற்க்கு ஏற்ப செயல்களை கற்றுக்கொடுங்கள் …

இந்த சின்ன பசங்கள் கெட்டதற்க்கு காரணம் அவர்களை சுற்றி இருக்கும் சமுதாயத்தால் தான் … அதனால் தான் இந்த கதைக்கு நான் … "சமூகத்தின் மாற்றம் "என்று தலைப்பை வைத்துள்ளேன்…

நான் எதாவது தவறான கருத்தை சொல்லி இருந்தால் மன்னித்துவிடுங்கள் … எனது தவறை எனக்கு தெரியப்படுத்துங்கள் நான் அதை திருத்திக்கொள்கிறேன்…

இப்படிக்கு
சமூகத்தின் மேலும்.சினிமாவின் மேலும் ஆர்வமுள்ள ஒரு மாணவன்… மா.மூர்த்தி

A Story By
M.Moorthi