Community

இரட்டையர்களின் கண்ணீர்

:dancer::princess:இளவரசி ராணியானேன்…:ring::couple::bouquet::neutral_face:
இங்கு பாசம் வைக்க ஆளில்லை
உண்மைக்கும் தான் மதிப்பில்லை💔
மனதின் ஏக்கம்
கண்களில் கண்ணீராய்
ஏனோ துன்பத்தை நீக்க வழியும் இல்லை…
ஏக்கத்தைப் பகிர்ந்து
துன்பத்தை குறைக்கலாமா…??

தாயை நினைத்தாள்
தன் கண்ணீரைக் குறைத்து
அவள் கண்ணீரை பெருக்க மனமில்லை…!!
தந்தையை நினைத்தாள்
தன் துன்பத்தை அவர் எண்ணி
கண்ணீராலும் குறைக்காமல்
மனதின் பாரம் சுமப்பாரே…!!

வேறெங்கும் பகிர மனமும் இல்லை
சிரிப்பால் மறைக்கலாமா
அதில் வலி குறையவும் இல்லை
வலி குறைய வழி தேடினாள்
சிறிய அறையின் பூட்டிய தாழ்ப்பாளுக்குள்
தன் கதை சொல்லி முடித்தாள்
தன் இரட்டைப்பிறவி கண்ணாடியிடம்…!!!:cry::cry::cry: