Community

கணவனே உலகம் மனைவிக்கு

யாருமில்லா நேரத்தில் கரம்பிடிக்கும் நேர்மையும்

சுற்றமும் இருக்கும் நேரத்தில் காதலையும் கண்டேன்

தூக்கத்தில் நுழைந்து சீண்டிய என்னை

உள்ளார்ந்த உணர்வுகளுடன் கட்டி தழுவ மனம் ஏங்கும்

பந்தலிலேயே இணங்கும் அழகிய பூக்கள்

சொல்லிமாளாது அத் தருணத்தின் அழகை

பிரியாத வண்ணம் இருக்க தோன்றும் உன் மார்பினிலே …

உன் பேச்சால் கிறங்கடித்த என்னை தீண்டிய

உன் கண்கள் சொல்லும் பல நூறு வார்த்தைகள்

மகரந்தத்தில் கூட இல்லாத வாசத்தை உன்மேல் நுகர்ந்தேன்

விண்ணை கூட தாண்ட நினைத்ததில்லை என் அருகில் நிற்பதை கண்டு

யாரிடமும் பேச நினைத்ததில்லை உன் காதலை உணர்ந்த பிறகு…

இரு மலைகள் திறந்து மழைபொழியும் தருணத்தில் உடனிருந்து பாதுகாப்பாய்

நோவு வந்தெங்கில் சரவெடிபோல் வேலை முடிப்பாய்

அழியும் இவ்வுலகத்தில் அழியாத கனவுகளை கொடுத்தாய்