Community

தெருவோர உலகம்

நீ வீணடிக்கும் உணவே நான் பசிக்கு புசிப்பது…
உணவை வீணாக்கும் பழக்கம் குறைந்தால் நானே அதிகம் பாதிக்க படுவது …
பிறந்தது சாலை ஓரம் என்றால் பள்ளியில் எந்த முகவரியை கொடுப்பது…
என்னை பற்றி ஏதும் அறியாமல் யார் இவ்வுலகில் வேலை தருவது …
உழைத்தே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஐந்து வேளை பட்டினியில் மறைகிறது …
ஒட்டிய தோலை இழுத்து பார்த்தால் சதை இன்றி அதில் எலும்புகள் மட்டுமே தெரிகிறது…
சூரியன் வந்தால் மட்டும் அது விடியல் அல்ல என்ற எண்ணம் , பேச ஆள் இன்றி விலங்குகளோடு பேசும் கனம் புரிகிறது …
விலங்கிற்கு ஒன்றெனில் பல சங்கங்கள் உதவ ஓடோடி வருகிறது …
சாலை ஓரம் அழுகையில், உயிர் பசியில் கரைகையில் பார்க்கும் சமூகம் ஒரு வேளை உணவு தருகிறது…
பசிக்கு உணவளித்தோம் வாழ்க்கைக்கு என் செய்வான் என்ற சிந்தனையை காற்றில் விடுகிறது…
என்னை போன்றோரை காக்காமல் மேடையில் மட்டும் பாரதியை பேசி என்ன செய்வது…
படி‌த்த மனிதனுக்கும் படிக்காதவனுக்கும் ஒற்றுமை சாதியிலும் மதத்திலும் மட்டுமே இருக்கிறது…
சாலை‌யி‌ல் பிறந்ததால் எனக்கு சாதி இல்லை மரங்களோடு வளர்ந்ததால் மதமும் இல்லை …
பணம் இருந்துவிட்டால் இவ்வுலகம் சாதி பார்ப்பது இல்லை, பணமும் இல்லாததால் எனக்கு நாட்டு ஜனத்தொகையில் இடமும் இல்லை…

35 Likes

Mass nanba.:heart_eyes::heart_eyes::heart_eyes::heart_eyes: keep rocking

1 Like

The best​:purple_heart: keep rocking :sparkles:

2 Likes

Super TTC Anna…:blue_heart::blue_heart:

1 Like

Dai Vera level da ne… kadsila kavithaiya pesi snehan mari ushar paniduva pola…

1 Like

Very Nyc Blog.Keep Writing.We Will Support you…

1 Like

இது வெறும் வரிகள் அல்ல வலியின் வெளிப்பாடு… வாழ்த்துக்கள் வெங்கட்:+1::ok_hand:

2 Likes

this is so touching… Keep good work bro

1 Like

Nalla eruku na supeer

1 Like

அர்த்தமுள்ள ஓர் அருமையான படைப்பு .
வாழ்த்துக்கள்.

1 Like

உங்களது கவிதையும் அருமையாக இருந்தது… நானும் நீங்கள் எழுதியது போல் ஒன்று எழுதியிருக்கிறேன்…ஆனால் அது எப்பொழுதோ எழுதியது…

1 Like

Mail- venkatdj88@gmail.com

1 Like

எப்போதும் எழுதுவதை நிறுத்தாதீர்கள்…

1 Like

Sure i wil do my best.
Thank you.

2 Likes

Congrats
Best wishes. :pray:

1 Like

Congrats for you too pa… Keep writing…

1 Like

your poem deserved it.
sure i will write
Thank you.

2 Likes

Words shows how humble you are and thanks for the words…

2 Likes

If you write something and if you like to share means just mail that in above mail id… If you are interested…

1 Like

உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

உமது எழுத்து பணியும் தொடரட்டும்
நன்றி.:slightly_smiling_face:

1 Like