Community

போர்கள் தோற்பதுண்டு போராட்டங்கள் தோற்பதில்லை

அம்புகள் துளைத்து
வாள்கள் வெட்டி
தொட்டாக்கள் துளைத்து
குண்டுகள் வெடித்து
மனிதர்பல மாண்டு
மனிதம் மறந்ததால்
போர்கள் தோற்பதுண்டு
போராட்டங்கள் தோற்பதில்லை
இறப்பது உடலாயினும்
இறவாதுயிர் கொள்கையென்று
அன்பறன் அறிவுடையோர்
சுயமரியாதை சுடரொளிச் சூடி
பொதுவுடைமை கடமையாற்ற
பொதுமக்கள் களங்கண்டு
பிறவுயிர் கொல்லாது
உரிமைகளை வெல்வதால்
போர்கள் தோற்பதுண்டு
போராட்டங்கள் தோற்பதில்லை