Community

பெண்ணாத்திச்சுடி

அடிமையும் அல்லள் நீ
ஆண்டாளும் அல்லள் நீ
இழிவும் அல்லள் நீ
ஈயும் பொருளும் அல்லள் நீ
உலகமெனும் உறைவிடத்தில்
ஊக்கத்தின் உணருயிர் நீ
எட்டாத உயர்வானையும்
ஏட்டைக் கொண்டு எட்டி விடு
ஐயமெனும் பூட்டிற்கு
ஒழுக்கம் ஒன்றும்
ஓங்குமனசான்றும்
ஔவைவழி திறவுகோல்
அஃதினால் எஃகு
மனம் கொள் மனிதியே
-#ஃ