Community

விழித்திரு என் தேசமே

விழித்திரு என் தேசமே

தூக்குக் கயிறு கட்ட பொம்மன் கழுத்தை இறுக்கியதால் வந்த சுதந்திரம்
கூரிய வாள் ஜான்சி ராணியின் மார்பில் பாய்ந்ததால் வந்த சுதந்திரம்
துப்பாக்கியின் தோட்டா வாஞ்சிநாதனின் நெற்றியில் ஊடுருவியதால் வந்த சுதந்திரம்
மதம் என்னும் கயிறு உன் கழுத்தை இறுக்கும் போது உணர்வதல்ல சுதந்திரம்
இனம் என்னும் வாள் உன் மார்பில் பாயும்போது உணர்வதல்ல சுதந்திரம்
மொழி என்னும் தோட்டா உன் நெற்றியில் ஊடுருவும் போது உணர்வதல்ல சுதந்திரம் கீதையை பின்பற்றும் நீ கிறிஸ்துமஸை கொண்டாடும் போது உணர்வது சுதந்திரம் பைபிளை பின்பற்றும் நீ ரம்சானை கொண்டாடும் போது உணர்வது சுதந்திரம்
குரானை பின்பற்றும் நீ சிவராத்திரியை கொண்டாடும் போது உணர்வது சுதந்திரம்

நினைவில் கொள் அயலவன் சூழ்ச்சி வென்று வீறுகொண்ட சோதரராய் ஒருமைப்பட்டு ஓங்கவே இச்சுதந்திரம், விழித்திரு என் தேசமே…

1 Like