Community

அக்கா இன்றும் ஓடுகிறாள்

கல்லூரி கலைநிகழ்ச்சியிலும்
தடகள போட்டிகளிலும்
கலந்துகொள்ளாமல் அக்கா
இருந்ததில்லை…

அக்கா ஓடினாள் ஆடினாள்
பாடினால் பேசினாள்
பரிசும் பெற்றால் இப்பொழுது
இரண்டு குழந்தைகளுக்குத்
தாயும் ஆனால்…

அவள் மகளும் அவளைப்போல
“எனது லட்சியம் விமானம்
ஓட்ட வேண்டுமென்று”
சொன்னபோது…

“உங்கம்மாவும் இப்படித்தா
போலீஸ் ஆகபோறேன்னு
சொல்லிட்டு இருந்தா இப்போ
ரெண்டு புள்ளைய பெத்துகிட்டா”
என்று அப்பா குறுக்கிட்டார்

இந்தியா சார்பாக வெண்கலம்
வென்று வந்த வீராங்கனையைப்
புகழ்ந்து பேசிய அப்பா
தங்கப் பதக்கம் வாங்கிவந்த
அக்காவைத் தயங்கி வாழ்த்தியதால்

அக்கா இன்றும் ஓடுகிறாள்
மாமா பின்னாலேயே…