Community

கனவில் ஒரு திருப்பம்

                 கனவில் ஒரு திருப்பம்

     அது ஒரு இதமான மாலைப் பொழுது திடீரென்று காற்று பலமாக வீச தொடங்கியது, மேகங்கள் இருள் சூழ, இடி ஓசை விண்ணை எட்டியது  பலத்த மழையால் பூமி தன்னை குளிர்வித்து கொண்டிருந்தது. வீரா தான் தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் வழியே  இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான். அப்படி இருக்கவே தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.  அந்த தொலைபேசியில் பேசிய நபரின் குரல்  வீராவை அச்சுறுத்துவது போல இருந்தது இன்னும் இரு தினங்களில்  நடக்கும் நிகழ்வுகளைப் பாா் என்று கூறியவுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வீரா சற்று பதற்றமடைந்தான் நெற்றியில் வியர்வைத் துளிகள் பூத்தது  தன்னிடம் பேசியது யாா் என்று எண்ணிக் கொண்டு இருந்தான்.  
       அன்றைய தினம் இரவு அவனுக்கு சரியான தூக்கம் இல்லை.  அந்த தொலைபேசி அழைப்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்.  அதிகாலை மூன்று மணியளவில் யாரோ தனது அறையின் கதவை தட்டுவது போல் சத்தம் கேட்டு கண் விழித்தான்  வெளியில் சென்று பார்த்தால் அங்கு யாரையும் காணவில்லை.  இதயத்துடிப்பு இரு மடங்கானது  பயத்தில் விரைவாக தன் அறையின் கதவை பூட்டிக்கொண்டு பக்தி பாடல்களை பாடிக்கொண்டிருந்தான்.  சிறிது நேரம் கழித்து மறுபடியும் கதவை தட்டும் சத்தம் கேட்டது.   கதவின் அருகில் மெதுவாகச் சென்று யார் வெளியே என்று குரல் எழுப்பினான்.  
    'டேய் மச்சான் நாங்க தாண்டா கதவைத்திறடா ' என்றனா் .  வீராவிற்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை  மறுபடியும் வெளியே யார் என்று கேட்டான்.  டேய் நாங்க தாண்ட ரமேஷ், ராஜா வந்திருக்கோம்  கேள்வி கேட்காமல் கதவை திறடா .  வீரா சற்று நிம்மதி அடைந்தான் நிதானமாக சென்று கதவைத் திறந்தான். தன் நண்பர்களை சந்தித்ததால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். அவன் அன்றைய தினம் முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.  தன் நண்பர்களிடம் தன் குழந்தை பருவ நிகழ்ச்சிகளை எல்லாம் நினைவுகூர்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.  திடீரென்று அவன் தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது, வீரா அது அந்த அச்சுறுத்தும் குரல் தான் என்று பயந்து விட்டான்.  ஆனால் அது அவனுடைய அலுவலகத்திலிருந்து வந்த  அவளே திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்ள அவன் தலைமை அதிகாரி உத்தரவிட்டார். ஆனால், அவன் நண்பர்கள் நீ அங்கு செல்ல வேண்டாம்  நாம் இங்கே மகிழ்ச்சியாக இருப்போம் என்று அவளை வற்புறுத்தினான்.  வீரா நான் எதற்கும் அலுவலகத்தில் நேரடியாக சென்று அவரிடம் கேட்டு வருகிறேன் என்றான். தன் இருச்சக்கர வாகனத்தில் புறப்பட்டான் போகும் வழியில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தான்.
   அலறி துடித்த வார கண்களைத் திறந்தான் வீரா சுற்றி சுற்றி பார்த்தால் தான் தன் வீட்டில் இருப்பதை உணர்ந்தான்  தான் கண்டது கனவு என்பதை புரிந்து கொண்டான்.  பின்பு நிதானமாக எழுந்து  தன் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டான்.  தான் கண்ட கனவைப் பற்றி எடுத்துரைத்தான்.  ரமேஷ் மற்றும் ராஜா கலகலவென்று சிரித்தனர். 
  ஏன்டா இப்படி சிாிக்கிறீர்கள்அந்த கனவை கண்டு நான் மரண பீதியடைந்தேன் என்று சொன்னான் அதற்கு அவர்கள் உனக்கு இன்னும் வேலையே கிடைக்கவில்லை மச்சான் அப்போ எப்படி ஆபீஸ் போவ எப்படிடா செத்துப் போவ எப்பவும் வீட்டில் தானே இருக்கிறாய் என்றனர். 

இவ்வாறு அன்றைய தினம் அந்த கனவை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.