Community

##**தனிமைப்படுத்துதல்**##

தனிமைப்படுத்துதல் பற்றி…
நஞ்சு கலந்திடாத…
பிஞ்சு மனம் கொண்ட…
என்னுடைய ஆனந்த வார்த்தைகள்…
நேரம் இருப்பின் செவி சாயுங்கள்…

ஏனோ தெரியவில்லை நம் பூமியில்.,
நோய் தொற்று மனிதனை விழுங்க தொடங்கியது…!!
அன்பு மானிடற்களே…!!
தனிமைப்படுத்தி கொண்டால் மட்டுமே.,
அவற்றை வெல்ல இயலும்…!!
சற்று சிந்தித்து பார்…
நம் நலனுக்காக போராடும்,
மருத்துவ துறை மற்றும் துப்புரவு பணியாளர்கள் குடும்பத்தை பற்றி…!!
அரசானை வந்ததும்.,
உலகமெங்கும் அமைதி நிலவுகிறது…
தினசரி வேளையில் ஓய்வு கிட்டியதால்.,
பணக் குறைவு ஏற்ப்பட்டது…!!
இவை ஏற்ப்பட்டாலும்…
குடும்பம் அனைத்திலும் ஒற்றுமையான மகிழ்ச்சி உரையாடல் தொடங்கியது…!!
அழகிய சிரிப்பிற்கு பஞ்சம் இல்லை…!!
சமுக வலைத்தளத்தின் புழக்கம் அதிகரித்தாலும்…
நண்பர்களிடம் கேளியும் கிண்டலும் அதிகம் காணப்படுகிறது…!!
இன்று வரை காணாத நிம்மதி கொண்ட உறக்கத்தை அனைவரிடமும் காண இயலுகிறது…!!
அறுசுவை உணவு கிடைக்காமல் போனாதின் காரணமோ…!!
ஆரோக்கியமான உணவு கிடைக்கிறது…!!
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாலை விபத்து அனைத்தும் அடங்கியது…!!
இதன் காரணமாக…
பூமா தேவி வியப்பில் ஆழ்ந்துள்ளாள்…!!
உயிர்களை பல அவள் இழந்தாலும்…
தூய்மையான உலகத்தை கண்டு
மகிழ்த்து கொண்டிருக்கிறாள்…!!
நிலம், நீர், காற்று, ஆகாயம், என அனைத்திலும் தூய்மை…!!
இச்சூழ்நிலை மனிதன் அனைவரும்
ஒன்று என்றுரைத்துள்ளது…!!
அன்பர்களே நீங்கள் தனிமை கொள்ள தவறினால்…
தனிமையிலே உயிர் தவறிவிடும்…!!
எனவே என் பேரன்பு மனிதர்களே…
வீட்டில் அமைதி காத்து…
உங்கள் உயிர்களை…
காத்து கொள்ள வேண்டுகிறேன்…!!!

                                            இப்படிக்கு
                                     உங்கள் நண்பன்
                                          சுபாஷ். இரா.