Community

காதலும் கற்று மற

என் ஜன்னல்
அந்த நூலகத்தை
கடந்து கொண்டிருந்தது.
மிகவும்
பழைமையான நூலகம்
அது.
ஐந்து வருடங்களுக்கு முன்பு,
அங்கு தான் சந்தித்தோம்.
புத்தக பசை தின்னும்
வெள்ளி மீன் போல
நானிருப்பேன்.
சிடுசிடுக்கும்
நூலகர் போல்
அவரிருப்பார்.
வழக்கம்போல் பொருந்தவில்லை ஜாதகம்
இரு வீட்டாருக்கும்.
காரணமேயில்லாமல்,
கடல் கரை-பூங்கா தரை
காதலுக்குக் காரணமானோம்.
வழக்கமான தண்டவாளத்தில் கதை
ஓடிக்கொண்டிருந்தது.

காவலில் நடந்தது
திருமணம்.
எங்கோ ஓர் ஊரில்
இருவருக்கும் பணி.
விவாதங்கள், தலைக்கனங்கள்
கிட்டத்தட்ட புத்தகத்தை
மறந்திருந்த சமயம்,
சிக்கிய கடிதமொன்று
தந்தியாகவே பட்டது.
“என் வாழ்க்கையைத் தேடிப் போகிறேன்”

"நான் யாரெ"ன்ற
கேள்வி
உடலெங்கும் துளையிட்டது
கருவண்டைப் போல.
உன்னை அறிவதிலே
தவறிவிட்டேன்
என்னை அறிய.
புறத்திற்கு பயந்து
அடங்கி ஒடுங்கியது
போதுமென்ற உறுதி.
இன்று,பிறந்த ஊரில்.

எவ்வளவு எளிதாய்
என்னை அழித்துவிட்டாய்
உன் வாழ்விலிருந்து.
சட்டைப்பையில்
தினம் பார்க்கும்
நம் குழந்தையின்
புகைப்படத்தை எப்படி அகற்றப்போகிறாய்?

1 Like