Community

மணமில்லா மணமாலை

இவள் விரக்தியின்
நாட்களை குறைப்பதற்காகவே/
ஆயுளை முடித்து விட்டது தினசரிநாள்காட்டி/
தொலைத்து விட்டக் காதலை தேடிப்பிடிப்பதற்குள்/
தூரமாய் மறைத்து வைத்ததுன் வெளிநாட்டுப்பயணம்/
காலாவதியாகாத நிச்சயிக்கப்பட்ட பதிவு திருமணம் /
காத்திருப்பு போராட்டம் நடத்துகிறது மெளனமாய்/
இரவு பொழுதுகளில் யாருமில்லா நிசப்தம்/
இணையத்தில் இணைந்தால் முகவரியில்லா குறுந்தகவல்கள்/வலைவீசி காத்திருக்கும் வசீகர மந்திரங்கள்/
அணைத்து வைத்து விட்டாள் அலைபேசியை/
வெறுமனே சிரித்தாலும் விளம்பரப்படுத்தி விடுகிறார்கள்/
களங்கமின்றி கதவை அடைத்து விட்டால்/
கட்டவிழ்த்து விடுகிறார்கள் பொய்க் கதைகள்/
நீ தேடி திரிகிற பணமெல்லாம்/
வெறும் காகிதமாய் தெரிகிறது கண்களுக்கு/
தூளி கட்ட ஏங்கி அவள்/
நாழி எண்ணி காத்து கிடக்கிறாள்/கோலார் தங்கத்தை கொட்டிக் கொடுத்தாலும்/
விழிகள் சிந்தும் கண்ணீர் பன்னீராவதில்லை/
உணர்வுகளை எல்லாம் ஊமையாக்கி விட்டு/
கனவுகளையெல்லாம் கற்பனையாக்கி கலைத்து விடாதீர்கள் /
அவள் நிழல்களில் தேடுகிறாள் நிஜங்களை/
கட்டியத் தாலியை கண்களில் ஒற்றிக்கொண்டு/
காதல் கணவனுக்காய் காத்து கிடக்கிறாள்/
கண்களின் ஈரம் கரம் பட்டு காயட்டும்/விரைவில் வந்துவிடு மிகவும் அவசரம்/

1 Like