Community

தேவதைகள் வாழவேண்டும்!

எத்தனையோ இன்னும் எத்தனையோ?
நம் தேசத்தலைமுறைகள் தரைமட்டமாக்கப்பட்ட தருணங்கள் எத்தனையோ?

கண்டதும் கயவர்கள் என நீ கண்டுருவது எவ்வாறோ?
மழலையே அவ்வறியாமைதான் உன்னை அழித்ததோ;

கோபமென்ற தீயில் பொசுக்கிவிடத்தான் தாய்மையும் தவிக்கிறது;
இயற்கையாகவே இயலாமைதான் தடுக்கிறது.

உன் சாதனைக் கனவுகள் எத்தனையோ அத்தனையும் எங்கள் சிந்தையில் நீ, சிதைந்தவளாய் !

இரக்கமற்றவர்களால் இலக்கணமற்றுப்போனது
இம்மண்ணின் வீரமும், கலாச்சாரமும்!

இனி,
வானத்தை விழித்ததும்ப மண்டியிட்டுப்பார்த்தாலும் வாராது
இந்த “வண்ணத்துப்பூச்சி”.

இவன் மனிதகுலமே இல்லையெனில் ஏதடா உனக்கு மன்னிப்பு!!

இம்மண்ணில் மலர்ந்த “நிலவையே”
விண்ணிற்கு வழியனுப்பிவிட்டு
பின்பு ,
வேறு எந்த நிலவைத்
தேடிக்கொண்டிருக்கின்றோம்
இங்கு ?

இறைவா!
உனக்கு ஒரு பிரார்த்தனை
அச்சிறுமியின் இறுதிச்சடங்கிலாவது இறங்கி வருவாயா??

காற்றிலாவது நம் பிரார்த்தனைகள் பதிவாகட்டும்.
இனியாவது,
இது முற்றும் என்ற முடிவை
எட்டட்டும்.

காரிருளில் தான்
விண்மீன்களும் வினா எழுப்புகின்றது;
வெண்ணிலாவும் விடை விதைக்கிறது
என்றதோர் நம்பிக்கையுடன்
புது விடியலை நோக்கி!!

இவள் சா. கவியரசி.

11 Likes

My Hearty congratualtions for your first adventure…May this journey brings you lots of wisdom, love and peace.:heart_eyes::heart_eyes:…this is a awe strucking piece…way to go my dear sister​:heart:

3 Likes

Awesome writings, proud moment. Keep going

2 Likes

Very super line…good job Kavi

1 Like

Superb sis…juz ruined🤩

1 Like

Thank you so much . U shwd me d way.
மிக்க நன்றி .

1 Like

Thank you so much .
மிக்க நன்றி sister

Thank you so much .
மிக்க நன்றி.

Thank you so much .
மிக்க நன்றி

ஒரு அழகிய சொற்பொழிவு… ஒரு மிகச்சிறந்த கவிஞராக இந்த பிரபஞ்சத்தில் நீ உலா வர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோதரி…

2 Likes

Super my dr sis. Keep rocking​:heart_eyes::kissing_heart:

3 Likes

Superb My dear bestiee … Good going… all the best Dr.

1 Like

மிக்க நன்றி sathya.
Thanks r all ur supports

Super Sister… Awesome writings…

2 Likes

வணக்கம் தோழி,

உம் கவிதை வரிகள் எமக்கு உணர்த்தியவை,

காரிருளில் தான் கவி எனும் காவியம் ஒவ்வொரு மனிதனையும் வினா எழுப்புகின்றது;
இம்மண்ணில் தேவதைகள் நலமுடனும், பாதுகாப்புடனும் வாழ விரும்புவதை உணர்த்துகின்றது.
இரக்கமற்றவர்களால் கோபமென்ற தீயை, கவிதை வரியாய் மாற்றியதை கண்டு மனம் பூரிப்படைகிறது.
காற்றிலாவது நம் பிரார்த்தனைகள் பதிவாகட்டும், எனக்கூறி கவிதையாய் உம் பிரார்த்தனையை இறைவனிடம் மட்டும் அல்லாது அனைவரிடமும் சேர்த்து விடுவீர்கள் …

உமது சிந்தனையும், கவித்திறனும் மென்மேலும் தொடர்ந்து வளர்ந்து “புது விடியலை நோக்கி” நீர் பயணிக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நன்றி

2 Likes

உங்கள் பெயர் வெற்றியாளர் பட்டியலில் வந்துள்ளமைக்கு என் வாழ்த்துக்கள்…

1 Like

மிக்க நன்றி.
உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .

1 Like

மிகச்சிறப்பு,
எமது கவிதையின் கருத்துக்களை மிகப்புரிதலோடு பதிவிட்டமைக்கு நன்றி. உங்களது எழுத்துப்பயணமும் தொடர வாழ்த்துகிறேன் :pray:

2 Likes

Thank you bro.
நன்றி :pray:

Hearty wishes for you…

1 Like