Community

பாரதிப் பிரியன்

ஆசிரமக் குழந்தையின் அழுகுரல்

தாலாட்டித் தலைகோத தாயு மில்லை
தட்டித் திருத்திட தந்தையு மில்லை
நினைத்ததை என்றும் செய்தது மில்லை
நேரத்திற்கு எப்போதும் உண்டது மில்லை
கதறி அழும்போது கட்டியணைக்க யாருமில்லை
கைபிடித்து கதைபேச கனிவுடன் யாருமில்லை
கொசுவின் கடியில் குருதி குறைகிறது
பசியின் பிணியில் வயிறு காய்கிறது
உலகம் எதுவென உணரும் முன்பே
உலகத்தால் ஒதுக்கப்பட்ட ஊமை நான்
ஊரார் பிறந்தநாளை உற்சாகமாய் கொண்டாடும்
பிறந்ததன் அர்த்தம் புரியா புதிரும்நான்
பத்தோடு பதினொன்றாய் மொட்டைத்தரையில் கிடக்க
படைத்தவனுக்கும் என்மீது முன்பிறவிப் பகையிருக்கோ?

– பாரதிப் பிரியன்

2 Likes

அம்மூன்று நாட்களில்

முதுகுத்தண்டு முறிந்திடும் வலியிலும்
முணுகக்கூட அவளுக்கோ வழியில்லை
கண்ணெதிரே கடவுளைக் கண்டிருந்தும்
கைகூப்ப அவளுக்கோ உரிமையில்லை
ஒதுக்கியே வைத்திடும் வலியை விட
உதிரம்சொட்டும் வலிஒன்றும் பெரிதில்லை
பெண்மையின் வலிமறைத்துச் சுருட்டையில்
செய்தித்தாளும் சத்தியத்தை உரைப்பதில்லை
மாதந்தோரும் மரணதண்டனை விதிக்கப்
படைத்தவனுக்கும் பெண்மீது பழிதீரா வஞ்சமோ???

தலைகோதி சொடுக்கெடுக்கத் துணையின்றி
தோற்றுத்தான் போகிறது பெண்மை மாதந்தோறும்
அம்மூன்று நாட்களில்

– பாரதிப் பிரியன்

1 Like