Community

கொரோனா காதல்

ஆயிரம் முத்தங்கள் தோத்து போகிறது… சாப்டியா? என்ற அவர்கள் கேள்வியில்…

பரவும் என்று பக்கம் வராத அவர் கைகள்
தான் அடிக்கடி பற்றி
கொள்கின்றன…

முககவசத்தால் முகம் காட்டாமல் போனாலும்
மொத்தமாய் கடத்துகிறது
ஒற்றை பார்வை…

சமூக விலகல் சாத்தியமற்று போகிறது
அருகில் நெருங்கும் நிமிடம்…

இப்படியெல்லாம் நடந்த நிஜங்கள்,
நமக்குள் நடக்க இருக்கும் நினைவுகளோடு காத்திருக்கிறேன்…

எந்த தளர்வும் இல்லாமல் நான்
நாமாய்…
:fountain_pen::fountain_pen::fountain_pen: ~~~ராஜாராம்

வெ.ராஜாராம் M.A, Dft
சிவகங்கை
9159597162