Community

விவசாயம் ...!

ஏர் கலப்பை பூட்டிய காலம்
நாலரை மணிக்கு எழுந்தோம்!
எருது பூட்டி ஓட்டிய காலம்
உடல் நலமுடனே இருந்தோம்!

குறுவை நட்டு விளைச்சல் பெற்று
கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தோம்!
சம்பா நட்டு விளைச்சல் பெற்று
புது சக்தியுடனே வளர்ந்தோம்!

குனிந்து நிமிர்ந்து வேலை பார்த்து
தினம் குதூகலத்தை அடைந்தோம்!
ஓலைக் குடிசையிலே வாழ்ந்தி ருந்தாலும்
பயிர் விவசாயத்தை அறிந்தோம்!

மானாவாரி தானிய பயிர் நட்டு
மன பலத்துடனே இருந்தோம்!
சொர்னாவரி நெல் பயிர் நட்டு
உள்ள சோகத்தினை கடந்தோம்!

முப்போகம் மாரி பொழிய பெற்று
முத்தான விளைச்சல் பெற்றோம்!
மூவேளையும் வயிறு நிறை பெற்று
சத்தான உணவை உண்டோம்!

பல்தொழில் நுட்பம் இன்று வந்து
வேலை எளிமையினை கொண்டோம்!
பயிர்த்தொழில் நுட்பம் இன்று வரை
உலகில் சிறந்ததென உரைத்தோம்!
உயிரில் கலந்ததென உணர்ந்தோம்!

-வரிகளின் வாரிசு ஜே.தினேஷ்கிஷோர்

1 Like