Community

அழகிய வெண்தாமரை

பார்ப்போர் கண்களுக்கு குளிர்ச்சி தரும் பசுமையான
எழில் கொஞ்சும் நந்தவனம் ஒன்று இருந்தது.
பொழுது புலரப் போகும் அதிகாலை நேரம் அது.
அதில் வற்றாத பாசி படிந்த அழகிய குளம் ஒன்று
இருந்தது.
அந்த குளத்தின் மையத்தில் ஒரு வெண்தாமரை
மொட்டாக இருந்தது.
அதில் ஆறு இதழ்கள் இருந்தன.

நந்தவனத்தில், இந்த உலகிலேயே மிக இனிமையாக
பாடிக் கூடிய, உற்சாகமாகும்,மனத்திலுள்ள
காயங்களைப் போக்கக்கூடிய பறவை தன் கந்தர்வ
குரலால் இனிமையான,சிறப்பான பாடலைப் பாடியது.
இராப்பாடி’ ஆங்கிலத்தில் ’ நைட்டிங்கேல்’ என்று
அழைக்கப்படும் பறவை அது.
அதன் பாடலின் இனிமையை கேட்டு
வெண்தாமரையிலுள்ள முதல் இதழானது மலர்ந்தது.

விண்ணியிலுள்ள கார்மேகங்கள் அந்த பாடலைக்
கேட்க நந்தவனத்தில் தன் மழையை பொழிந்தன.
அவை நந்தவனத்திலுள்ள பசுமையான புல் தரையின்
மீது பட்டு தெறிக்கும் போது எழுந்த சப்தமான மழை
விழும் ஓசையைக் கேட்டு இரண்டாவது
வெண்தாமரை இதழானது விரிந்தது.

இந்த உலகிலேயே மிகுந்த நறுமணம் வீசுகின்ற,
வசீகரிக்கின்ற,மிக மென்மையான,
வெண்மையான,அழகான பூவாகிய ‘கும்பிலி
ஆங்கிலத்தில் ‘கார்டன்யா’ என்று அழைக்கப்படும்
பூக்கள் நந்தவனத்தில் பூத்தன.
அதன் மிகுந்த நறுமணம் மழைக் காற்றோடு சேர்ந்து
வீசும் போது ஏற்படும் நறுமணத்தால் மூன்றாவது
இதழானது மலர்ந்தது.

நந்தவனத்தில் வருடமில்லாம் பூக்கும் மிக மிக சிறிய
பூவாகிய இனிப்பு அலோசியமாது கொத்து கொத்துதாக
பூத்து இருந்தது.
மிதமான நிழலும், முழுசூரிய வெளிச்சமும் ஏற்ற
பக்குவசூழல்.
ஊதா,வெள்ளை,சிவப்பு வண்ணத்தில் பூக்கும் இந்த
பூக்களானது பந்து வடிவில் பூத்து இருந்தது.
இதன் வாசமானது தேனின் வாசனையை ஒப்புமாம்.
இதுலிருந்து வரும் இனிமையான நறுமணத்தால்
நான்காவது இதழானது மலர்ந்தது.

அந்த குளத்தில் ஒர் அழகிய தங்க மீன் ஒன்று
இருந்தது.
அது பொழுது விடிந்த உற்சாகத்தில் குளத்தில் இருந்து
மேலே எழுந்து தாவி உயரத்திலுருந்து மீண்டும்
குளத்தில் குதிக்கும் அந்த அற்புத காட்சியைக் கண்டு
ஐந்தாவது இதழ் மலர்ந்தது.

மழை பொழிந்ததால் வண்ண வானவில் விண்ணில்
உதித்தது.
நந்தவனத்தில் இருந்த ஒரு சந்தன மரத்தின் கீழ்
ஒரு சிறிய குட்டை மழை பொழிந்ததால் உருவானது.
அதில் வானவிலின் பின்பமானது குட்டையின்
முழுவதிலும் அழகாக நிறைந்து இருந்தது.
அதில் சந்தன மரத்திலுள்ள ஒரு இலையில் ஒரு துளி
மழை நீரானது சருக்கி அந்த குட்டையில் அழகாக
விழ,வானவிலின் பின்பமானது தெறித்து, கலங்கி, ஏழு
வண்ணங்களும் சேர்ந்து ஒரு வண்ண கோலம்
போட்டது.
அந்த வண்ண காட்சியைக் கண்டு ஆறாவது
இதழானது மலர்ந்தது.

அவ்வாறு ஆறு இதழ்களும் மலர்ந்த அந்த
சிறப்பான,அற்புத,அரிய வெண்தாமரையை பறித்து,
அதன் மீது பன்னீர் தெளித்து, அதை எடுத்து என் அன்பு
அண்ணனுக்கு கொடுப்பேன்.

                                                                                     -இந்து.
1 Like

Pazhangaala kadhai Pol ulladhu… vaazhthukal

1 Like

Mikka nantri …