Community

மரம் என்கிற வரம்

இன்றைய உலகில்,
தொடுதிரையை (மொமைல்) தொடத்தான் பலரும் தேடுகின்றனர்…
மரக்கன்றுகளை மண்ணில் தோண்டி நட யாரும் நாடவில்லை

என் மனதிற்கும் மரத்திற்கும் இடையே நடந்த கற்பனை காதல் உரைநடை…

மண்ணோடு வேரூன்றி நிற்பதைப் போல— என் மனதிலும் உன் வேரை ஊன்றி நின்றாயோ…

தரைக்கு மேல் உயர்ந்து, பட்டுப்போல் படர்ந்து நிற்கும் உன் மரக்கிளையைப் பிடிக்க எந்தன் விரல் நீட்ட, என் கை கைக்கொடுக்கிறது உனக்கு…

               இது என் வரமா!
                      கேட்கிறேன்—மரத்திடம்..

பாஷைகள் ஏதுமின்றி
பேச அழைக்கிறாய்
உன் இலைகள்
மூலம் தலையாட்டுகிறாய்
என் மறுவார்த்தைக்கு
இதுதான் காற்றின்மொழியோ…

நான் விதைத்த விதை
சட்டென தளிர்விடும் தருணம்
நினைத்ததை சாதித்ததைப்
போல— நான்
நீ (மரம்) என் மனதில் கோடி
நம்பிக்கையை (விதை)த்தப்படி.