Community

பூக்காத பூக்காதல்

பூ மலர்வதில் பல பருவங்கள் உண்டு. அரும்பிற்கு முற்பகுதியான நகையாய் இருக்கும் ஓர் மலர் தன் அருகில் இருக்கும் இன்னொரு மலரிடம் பேசுவதாய் இக்கவி அமைக்கப்பட்டு இருக்கிறது.
பூக்காத(ல்)…
ஒரே தோட்டத்தில் பூத்த மலர்கள் நாம்…
நான் இன்று நகை,நீ நாளை அரும்பு…
காற்றோடு நீ இசை பாடுகிறாய் போலும்
இந்த உலகின் நீதியை நீ அறிவாயோ?
அழகான பூவை என்றுமே பறித்து விடுவராம்…
ஆனால் உன் நறுமணம் என்னை ஈர்க்கவில்லை
நற்குணம் தான்!; காற்றினால் என்னை உறசுகிறாயே!!
காலை சூரியனைக் கண்டு விட்டேன் நான்…
உன் பின்னே மறைமுகமாய் ஒளி வீசுகிறது
மாலை நேர தென்றல் உன்னை எடுத்துவிட்டதா?
எங்கும் தேடினேன் நான், காணவில்லை உன்னை…
ஏக்கத்தோடு கீழே இறங்கி பார்த்தேன், ஆ!!
அதோ! அந்த மங்கையின் கூந்தல் சிலிர்க்கிறது…
அன்று தான் தெரியும் நான் ஒருநாள்;
சிரிக்கும் குண்டு மல்லி ஆனால் நீயோ,
வாடாமல்லி!!
பூவிற்கும் சிரிப்பவரை தான் பிடிக்குமாம்…
நீங்கள் எப்படி?..
By
R. Shanmuga priya.
Reviews are always reviewed!!
Dm @Empty_thinker07
Or mail to priyaragavan007@gmail.com for more.

2 Likes