Community

காதல் கவிதை கவிதை

எது காதலடி…
காற்றாய் தேகம் லேசாகும்…
கல்லாய் இதயம் மட்டும் பாரமாகும்…
வார்த்தைகல் எல்லாம் முட்டாளாய் இதழ்கள் தடுமாறும்… தீ
ண்டும் நேரம் சொர்கம் பூமி வரும்!
இப்படி வார்த்தைஜால வித்தகர்கள் தங்கள் திறமைகளை கொட்டி தீர்த்த இவை…
காதல் இல்லையடி…
பெண்ணே! தூரம் நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க…
எதிர்காலம் புரியாமல் கேள்வி குறி ஒன்று கன்முன் நிற்கும்…
ஒரு தலையாய் தீப்பந்தம் ஏற்றி கொள்ளும் இவை…
காதல் இல்லையடி பெண்ணே ! கதை சொல்லி…
தலை கோதி…
விரல்கள் கோர்த்தவாறு சில தினங்கள்…
இதல்கல் கோர்த்தவாறு சில தினங்கள்…
படபடக்கும் இதயம்…
ஆசை அடங்கியவுடன்… கதறி அழும்…
இதுவும் காதல் இல்லையடி பெண்ணே!
பேசா கதைகள் பேசிமுடித்து…
வானும் மண்ணும் மறந்து…
வாழ்ந்த நாட்களை எண்ணி எண்ணி ரணம் கண்டா இதையும்…
நவீன தலைமுறை பிரேக்கப் என்று ஸ்டைல் ஆக சொல்லி…
தாடி வளர்ப்பது…
கேடு நினைப்பது என அனைத்தும் மாறும்…
இதுவும் காதல் இல்லையடி பெண்ணே! எதிர்பார்ப்பு அருந்த…
ஆசை மறந்த…
அழுது அழுது கன்னங்கள் கணிந்தன வலிக்கு ஆறுதலாய் வார்த்தை வீசும் உறவுகளே…
காதல்!!!:heart: