Community

அனாதை ஆனந்த்

அனாதை
இதைச் சொல்லும்போதே
ஒரு வலி
வேதனை வருகிறது அம்மா காலங்கள் ஓடினாலும்
என் வினாவிற்கு
விடை தெரியவில்லை அம்மா பிறந்த அன்றே எனக்கு
கள்ளிப்பால் கொடுத்து என்னை கொன்று இருக்கலாம் அம்மா
நீங்கள் என்னை சாகடிக்காமல்
உயிரோடு விட்டுவிட்டு போய்விட்டீர்கள்
என்றால்
உங்கள் மனதிலும்
சிறு ஈரம் உள்ளது
என்று மட்டும் தெரிகிறது
மற்றவர்கள் எனக்கு "ஆனந்த்’’
என்ற பெயரை வைத்து அழைத்தாலும்
நீங்கள் யாருமே
கொடுக்க இயலாத
பட்டத்தை கொடுத்து
எனக்கு வாழ்வை
கொடுத்துள்ளீர்கள்
“ஆனந்த்” என்ற வார்த்தை
பெயரில் மட்டும்தான் உள்ளது
இதுநாள் வரை
வாழ்க்கையில் ஆனந்தத்தை
பார்த்தது கிடையாது
பெயரை சொல்லும் போதே
நீங்கள் கொடுத்த
அடைமொழியோடு
சேர்ந்து வருகிறது
எப்படி நான் ஆனந்தத்தை
அனுபவிக்க முடியும்
யார் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
கூறட்டும் அம்மா
ஆனால்
நீங்கள் யாரிடமோ
ஏமாந்து போனதற்கு
அந்த “அனாதை ஆனந்த்”
என்ற பட்டத்தை மட்டும்
உங்கள் வாயாலே சொல்லி
விடாதீர்கள் அம்மா!