Community

பூனைக்குட்டி... (கவிதை)

பூனைக்குட்டி (கவிதை).

ஆசிரியர்:நி.அமிருதீன்
உதவிப்பேராசிரியர்
தமிழாய்வுத் துறை
ஜமால் முகமது கல்லூரி
திருச்சி 20
9362 940095.
amirdeen71@gmail.com
You tube:- amir voice tamil

@ என் வீட்டு மூலையில்
புதிய பூனைக்குட்டி ஒன்று.
நான் பெரிதாககண்டுகொள்ளவில்லை.

@ மீசைகளை ஆட்டி
விழிகளை உருட்டி
என்னை முறைத்த போதும்
நான் எதையும் கண்டுகொள்ளவில்லை.

@ எலியை துரத்திப் பிடித்து, பின்
விட்டுப் பிடித்து
விளையாடிய போதும்
நான் எதையும் கண்டுகொள்ளவில்லை.

@ வீட்டு முற்றத்தின் மரத்தில்
ஏறுவதுமாக
தாவுவதுமாக விளையாடிய போதும்
நான் எதையும் கண்டுகொள்ளவில்லை.

@ இவையெல்லாம்
பருந்தின் வாயில் சிக்கிய
பூனைக்குட்டியின் அலறல்
கேட்கும் வரை தான்.

@ இப்போது
அடிக்கடி வீட்டின் மூலையை
பார்க்கிறேன்
பூனைக்குட்டியே இல்லாமல்.

@ எங்குமே குதிக்க முடியாத அது
இப்போதும் குதித்துக் கொண்டுள்ளது
என் மனதில்.

@ இது போலத்தான்
நாம் இழந்த பலவற்றின்
கதையும் ! ! !