Community

திருநங்கை சபதம்

காதலை தேடிடும் என் ஓவியமே…
தேடிடும் ஆசைகள் வெகு தூரம் உள்ளதே… மண்ணிலே காதலை தினம் போற்றும் உள்ளமே…
கேட்குமே என் மனம் என் ஓவியத்தை…

தாளங்கள் சேரும் பொழுது உண்மை அறியாமை ஆகுமே…
ராகங்கள் பேசும் பொழுது அச்சம் உயிர்விட்டு போகுமே…
நேரத்தின் கொடுமை நான் அறிவேனே… பாசத்தின் பயனை நான் உணர்ந்தேனே… இது தான் வாழ்க்கை என்று சொல்ல துடித்தேன்…
இது என் வாழ்க்கை என்று சொல்ல துடித்தேன்… அழுதேன்… அழுதேன்

விண்ணை தொடும் ஆசை பலருக்கும் உண்டு…
ஆழத்தின் ஆழம் காண்பது கடினம்…

எனது சொற்கள் மாறின…
எனது காரணம் மாறின…
திண்டாட்டங்கள் மாறின…
குழப்பங்கள் மாறின…
கல்வி மாறின
காரணம் மாறின…
கடவுள் மாறின…

இது என் வாழ்க்கை என்று சொல்ல துடித்தேன்…
இது தான் வாழ்க்கை என்று சொல்ல துடித்தேன்…அழுதேன்…

விண்ணை தொடும் ஆசை பலருக்கும் உண்டு…
ஆழத்தின் ஆழம் காண்பது கடினம்…