Community

கற்பனை சாரல்

24 ஆண்டுகள் காத்துகிடந்த நாள் அன்று…
ஆம் என்னவன் என்று என்னி அவனை கண்டேன்.அந்தி சாயும் மாலை பொழுது அவனுக்காக நான் ஏங்கிய தருணம் சற்றும் எதிர்பாராமல் திகைத்து போய் நின்றேன் அவன் கண் ஈர்ப்பு விசையால்.கனவா என்று நினைத்து சுற்றி பார்த்தேன் அவன் விழிகளை தவிர வேறு ஏதும் தென்படவில்லை. ஆனந்தத்தில் ஆழ்கடலில் குதித்தேன், ஆகாயத்தில் பறந்தேன், அங்கும் இங்கும் சுற்றினேன் வாய் மொழி பேச வார்த்தைகளை கோர்த்து அருகே சென்றேன் ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் என் வார்த்தைக்கு தடையிட்டது ஒன்றும் புரியாமல் குழம்பி என் மௌனத்தை தூதுவனாக அனுப்பினேன் சொல்லி வா என் ஏக்கத்தை அவனிடம் என்று…
மௌன உரையாடல் இனிதே இறுதி கட்டத்தை எட்ட என் கண் பார்த்து கதை பேசிய அவன் விழி பார்வை சற்றே விலகியது அருகே வந்த அவன் காதலி மீது:stuck_out_tongue_winking_eye::blush::stuck_out_tongue_winking_eye: