Community

தன் வினை தன்னைச் சுடும்!

தன் வினை தன்னைச் சுடும்!
++++++++++++++++++++++++

மச்சான்… எங்கியாவது வெளியில போலாமா என்று கேட்ட ஜனாவிடம் வேணாடா என தொய்ந்த குரலில் பதிலளித்தான் மனோஜ் என்கிற மனோ.
என்னடா ஆச்சி… நீதானே இன்னிக்கு போலாம்னு சொன்ன… மனசு சரியில்ல அதான் என்று பதிலளித்தான் மனோ
அந்த பொண்ணு மேட்டரா… கடைசியி என்னடா சொல்றா அவ. வீட்ல பாக்கிற மாப்பிள்ளய தான் கட்டிக்குவேனு சொல்லிட்டா…
மச்சான்… இவளுங்களுக்கு நல்லபடியா சொன்னா புரியாதுடா… அவள சும்மா விட கூடிது… அவ திமிர அடக்கி காட்டனும்… வேணா விட்றா என்ற மனோவிடம் நீ சும்மா இருடா என்று கத்தினான் ஜனா…
நீ அவகிட்ட நல்லவிதமா பேசி நம்ம ப்ரன்ட் விக்கி வீட்டு கெஸ்ட் ஹவுஸ் கூட்டிட்டு போய்டு… என் தங்கச்சி பர்த்டே நா வீட்டுக்கு போய்ட்டு வரேன்… அப்படியே பீர் பாட்டில் ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வந்துடறன் என்ற ஜனாவிடம் விருப்பமில்லாமா தலையாட்டினான் மனோ.
பீர் பாட்டில் வாங்கிட்டு திரும்பியதும் பாக்ட்டிலிருந்து அலறிய செல்போனை அழுத்தி, மச்சான் முடிச்சிட்டியாடா என்ற ஜனாவுக்கு, “டேய்… எங்கடா இருக்க… சாயந்திரம் கோயிலுக்கு போன உன் தங்கச்சிய காணோம்டா… சீக்கீரமா வீட்டுக்கு வாடா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு”… என்று அம்மாவின் குரல் ஒலித்ததும், கையிலிருந்த பாட்டில் கீழே விழுந்து நொருங்கியது. உடைந்த பாட்டில் இதயத்தில் செருகியது போல் இருந்தது ஜனாவிற்கு!
----Thilagamelango73gmail.com