Community

கூலி தொழிலாளியின் ருசிகரமான கனவு !

அன்றாடம் தினக்கூலி செய்யும் தொழிலாளி, அவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி மற்றும் ஒரு ஆண் குழந்தை சில பசு மாடு அதன் கன்று ஐந்து கோழிகளையும் வளர்த்து வந்தார். தினசரி வேலை பார்த்து களைப்புடன் வீடு திரும்பும் அவர் உணவு உண்ட பின்பு முற்றத்தில் உள்ள கட்டிலில் உறங்குவதுண்டு அந்த நாளும் அதை போல கட்டிலில் சாய்ந்தபடி குழந்தையின் அழுகை சப்தம் கேட்டபடி கண்களை மூடினான்.சொகுசு வாகனத்தில் பயணித்தப்படி அவனுடைய அடுக்கு மாடி குடியிருப்பு-ல் உள்ள வீட்டிற்கு வந்ததும் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றான் தொட்டியில் உள்ள அவனது குழந்தை ஏன் இவ்வளவு நேரம் தாமதம் என்று மனைவி கேட்க அவனது தாயார் விரைந்து வந்து சாப்பிடு என்று கூறி அவன் திகைத்துப்போய் தாயுடன் உணவு உண்ட தொடங்கினான். ஏதோ தவறான வீட்டிற்கு சென்றது போல அவனது மனதில் எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது விரைந்து உணவு உண்டு நன்கு சுற்றி வருகிறான் வீட்டின் உள்ளே பல வரிசையில் அடுக்க பட்டிருந்த அலங்காரம் பொருட்கள், சுவரில் பதித்த தொலைக்காட்சி பெட்டி என வீட்டின் அனைத்து பொருட்களும் அவனுக்குள் “என்னை சுற்றி என்ன நடக்கிறது” என்று தன்னை தானே கேட்ட படி படுக்கை அறைக்கு சென்று கட்டிலில் படுத்தான் அருகில் இருந்த மனைவி கணவனை நோக்கி என்ன சிந்தனை என கேட்க அவனும் எதுவும் இல்லை என்று கூறிய படி தண்ணீர் அருந்த வெளியே சென்றான் நடக்க தொடங்கிய அவன் கால் தடுமாறி கீழ் நோக்கி செல்ல படக்கென்று கண் விழித்தான் அதே சூரியன் உதிக்கும் நேரம் அவனுடைய பசு மாடு சப்தம் எழுந்த அவன் சிரித்த படியே கட்டிலை விடுத்து கீழே இறங்கினான்.ஆம், கனவு தான் கூலி தொழிலாளியின் ருசிகரமான கனவு!

1 Like