Community

விதி ? - குயிலின் கானத்தை கவி செய்ய முற்படும் கவிஞருக்கு அக்குயிலின் கூற்றாக :

அது -
இருள்மை பூசிய -
ஒளியின் வேலை(ளை) - மாலை !

கொட்டித்தீர்த்தாகிவிட்டது.
ஆனால்,
இன்னும் முழுதாய்த் தூர்ந்துபோகா,
மெல்ல நகரும், மேகக்கூடையில் -
மிஞ்சிய கொடைப்பூ - தூரல் !

க்கூ…க்கூ…க்கூ…
சிறு சிறு இடைவேளையில்,
சிங்கார ஸ்ருதி - குயில் பாட்டு !

கவிபாடும் குயிலின்,
சீரான இடைநிறுத்தம் - இனிமை !

ஹிம் ! இனிமை -
இது - உனதுணர்வு.

இன்றோ, இளைப்பாற -
இங்காவதோரிடம்.
சாலையாய் மாறிய,
சோலையில் மிஞ்சிய,
தனியொருவனின்,
பெருந்துணை - ஒற்றை மரம் !

ஒற்றை மரம் -
இளைப்பாற இன்று -
இங்காவதோரிடம்.
நாளை ? நாளை…?

எதிர்காலம் பற்றிய,
எனது குமுறல் - உனதினிமை.
ஹிம் !
யாரைக் குறை கூற நான் ?
எல்லாம் -
என் விதி !???

1 Like