Community

இ(பு)து கவிதை

இ(பு)து கவிதை:

வானம்,பூமி
மழை,மேகம்
காற்று,கடல்
மண்,மரம்
இரவு,பகல்
மலர்,மங்கை
சந்திரன்,சூரியன்
கருப்பு,வெள்ளை
இவற்றோடு மட்டும்
உறவாடும் கவிதைகளுக்கு

கண்ணாடிக்குள் ஒழிந்து
குச்சியை பிடித்து
மனதைக் கண்டு
மணத்தை அறிந்து
கைகளால் உணர்ந்து
கற்பனையில் மகிழ்ந்து
ஒலியைப் படித்து
ஒளியை புதைத்த
கண்களின் கவிதைகள்
என்றும் அந்நியர்களே!