Community

நினைத்தே வந்தாய்

நினைத்தே வந்தாய்…அழகான காலை சூரியனை சுட்டு எரிக்கும் அவன் விழிகளோடு தொடங்கியது…அந்த காலை…பார்த்து இருப்பானோ…இதே பரபரப்புடன் தினம் தினம்…பேருந்தின் பயணமாய் அவனோடு தொடர்ந்தது…எந்த நேரமும் எதையோ தேடுதல் போன்ற அந்த விழிகள்…எனை தாண்டி செல்லும் போதெல்லாம் கொஞ்சம் நின்று போனால் தான் என்ன? கேள்வியாய் என் நொடிகள்…அலுவலக அலப்பறைகளில் அவன் நினைவு நீண்டு கொண்டே போனது…எதையும் சிந்திக்கும் திறனற்றவலாகி போனேன்…யார் அவன் எதற்கு என் மனம் பதறுகிறது…தினம் தினம் ஒரு யுகமாய் சென்று கொண்டிருந்த பொழுதுகளில் காணமலே போனேன்…பேர் ர் தெரியாத காதலா என்று புதிர் போட்டவர்களை விட புண்பபடுத்தியவர்களும் சிலர்…எனக்கு என்ன ஆனது …?கோவில் அமைதியில் கூட அவன் நினைவுகள் சத்தமாய்…மெதுவான அமைதியுடன் திரும்பி பார்தேன் என்னவன் எனை தாண்டி சென்று கொண்டிருந்தான்…அவனை அழைப்பது எந்த பேரில் என்று நா தழுத்த போது…அம்மாவின் கண்டிப்பு குரல் குருக்களிடம் குங்குமத்தை மறந்தாய் என்று…என் பொட்டுக்கு சொந்தகாரன் தொலை தூரத்தில் சென்று கொண்டிருந்தான்…காற்று வேகமெடுத்தது…காற்றே என் காதலை அவனிடம் சொல் என்று ஊமைக்காதலாய்…மனதால் புழுங்கி கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் அவன் எனை தாண்டி குருக்களிடம் சென்று பேசி கொண்டிருந்தான் அவன்…அம்மாவின் பிடியில் நான்… எனை பார்க்காது அழகிய புன்னகையோடு அழைப்பிதழை கொடுத்து கைகூப்பி விடை பெற்ற போது…என் காதலும் விடைப்பெற்று கொண்டிருந்தது…அனைத்தும் மறந்து உறங்கி போனேன்…எழுந்த போது பரபரப்புடன் இருந்தார்கள்…களையிழந்த என் முகத்தை அன்போடு தொட்டு…அம்மா சொன்ன வார்த்தைகள்…உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்று…வலிக்கு மேல் வலியாய் அம்மா கொடுத்த எனக்கான மாப்பிள்ளை போட்டோவில் என்னவன் சிரித்து கொண்டிருந்தான்…என்னுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்…வானவில் வசந்தமாய்…மழைக்கால கொண்டாட்டமாய்…தரையில் நிற்காது வானத்தில் பறந்தேன்…அம்மாவை கையை பிடித்து சுற்றினேன்… புரியாது விழித்த தாய்க்கு தெரியாது அந்த கண்டும் காணாத அந்த காதல் வலி…வாசலில் காத்து கொண்டிருந்தேன் அவன் வருவான் என…

1 Like

The words you used to express are too good