Community

என் கனவு வாழ்க்கை

அதிகாலை எழு
சூரியனை வெற்றி கொள்
விவசாயம் பழகு
வியர்வையில் குளி
சேற்றில் கரைந்து போ
மழைநீரின் தூய்மை கொள்
“ஆ” வின் அமைதி பெரு
ஆடுகளின் துணிச்சல் தேடு
வேம்பின் நிழல் காண்
மாங்கனி சுவை
ஓட்டம் ஓடி ஓய்வு கொள்
தூய நீர் குடி
கூட்டாஞ் சோறு செய்
கிணற்றுடன் சண்டை இடு
கதைகள் கேட்டறி
சிந்திக்க நேரம் ஒதுக்கு
உன் புத்தி சொல்வதை செய்
அன்பிடம் அழிந்து போ
உண்ணும் உணவில் மகிழ்ச்சி காண்
அயர்ந்து உறங்கு
அதிகாலை எழு…

             - ஜெயவேல் பிரகாஷ்